- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு…

தேனி, டிச.10:-
தமிழகத்தில் மழை குறைந்துள்ளதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
மண்டலகால பூஜைகள்
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மழை குறைந்துள்ளதை ெதாடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் பிற மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
சோதனை சாவடி
இதற்கிடையில், தேனி மாவட்டத்தில் பக்தர்களின் வாகனங்களை தணிக்கை செய்வதற்கு என்றே 12 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டது. டிசம்பர் 6-ந் தேதி  பாபர்மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் தேனி, கேரளாவின் இடுக்கி மாவட்டங்களில் 30 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இப்போது இவை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் சபரிமலைக்கு செல்கின்றன. இதனால் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் வெள்ளம் போல் குவிந்து வருகின்றனர். வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. நெய் அபிஷேகம், மற்றும் புஷ்பாபிஷேகம் போன்றவை செய்வதற்காக பக்தர்கள் அதிக நேரம் தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலை உண்டாகி உள்ளது.

படவிளக்கம்

1. சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சன்னிதானம் முன்பு குவிந்துள்ள பக்தர்கள்.
2. சபரிமலையில் 18 படிகளில் ஏறும் பக்தர்கள்.

Leave a Reply