- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் போட்டியா? வைகோ பேட்டி

சென்னை,பிப்.16-
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான வைகோ போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆஜராக வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.1000 கோடிக்கு சொத்து
காங்கிரசுடன் தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி குறித்து அழகிரி விமர்சனம் செய்திருப்பது, ‘கோட்டைக்குள்ளே இருந்து ஒரு குரல் எழுந்துள்ளது,’ என்றே கருதுகிறேன். இலங்கை தமிழர் பிரச்னைக்காக கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியபோது, ‘கூடா நட்பு கேடாய் முடிந்தது,’ என்று கருணாநிதி கூறி உள்ளார். மேலும் காங்கிரசுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை, என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது எந்த அடிப்படையில் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள் என்று இதைத்தான் அழகிரியும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். தமிழகத்தில் ஊழலின் மொத்த உருவானவர் ஜெயலலிதா. அவர் ஒரு போதும் திருந்தப் போவது இல்லை. தலைக்கு மேலே சொத்துக் குவிப்பு வழக்கு என்ற கத்தி தொங்கும் நிலையிலும், தனது தோழி பெயரில் ரூ.1000 கோடிக்கு சினிமாத் தியேட்டர்களை வாங்கி உள்ளார்.
தேர்தலில் போட்டி?
அ.தி.மு.க.வும், தி.மு.கவும் ஊழல் கட்சிகள் இவற்றை புறந்தள்ளி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை மக்கள் தேர்வு செய்வார்கள். எங்கள் கூட்டணியில் சேருமாறு தே.மு.தி.க. த.மா.கா உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சியின் ஆட்சிமன்ற குழுதான் முடிவு செய்யும்.
இவ்வாறு வைகோ கூறினார்.

Leave a Reply