- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், விளம்பர பலகைகளை தவிர்க்க அறிவுறுத்தப்படும்

சென்னை, மார்ச் 2:-
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் விளம்பர பலகைகளை தவிர்க்கும்படி அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் ஏ.பி. சூர்ய பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் வழக்கில் கூறியிருந்தாவது:-
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் சார்பில் பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் விளம்பர பலகைகளை டன் கணக்கில் பயன்படுத்துவார்கள். சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 3400 டன் குப்பபைகள் அகற்றப்படுகின்றன. இதில், 35 முதல்- 40 டன் வரை பிளாஸ்டிக்கழிவுகளாகும். பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுபுற சூழ்நிலைக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இந்த சூழ்நிைலையில், பிளாஸ்டிக் பொருட்களை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்த அனுமதி வழங்கினால், சுற்றுபுற சூழல் பாதிக்கும்.
பிளாஸ்டிக் பொருட்கள்
ஆகவே, பிளாஸ்டிக்கொடி விளம்பர பலகைகள் அரசியல் கட்சிகள் பயன்படுத்த  தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கனவே, தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் பிளாஸ்டிக் கொடி தோரணங்கள் விளம்பர பலகைகளை பயன்படுத்தும் அரசியல் கட்சி வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த நிீதிபதிகள் தேர்தலின் போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
்தேர்தல் கமிஷன் அறிவுரை
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரஷே் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் டி. ராஜகோபால் ஆஜராகி வாதாடுகையில், தேர்தல் ஆணையம் பிளாஸ்டிக் பொருட்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தவிர்்க்க வேண்டும் என்று, அறிவுரைகளை வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். கடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் பொருட்களை பயன்படுத்துவது மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பேனர்கள், கொடி தோரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாசுகட்டுப்பாட்டு வாரியம்
அதேபோலே வரும் சட்ட மன்ற தேர்தலின் போது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் செய்யும் என்று உத்தரவாதம் வழங்கினார். மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, வழக்கு விசாரணையை வரும் 14-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Leave a Reply