- அரசியல் செய்திகள்

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவாரா? விஜயபிரபாகரன் பேட்டி

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவாரா? என்பது குறித்து விஜய பாஸ்கரன் மகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டமன்ற தேர்தலில், தே.மு.தி.க.-அ.தி.மு.க. கூட்டணி தொடர்வது குறித்த பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை.

சசிகலா விடுதலையாகி வருவதற்கும், தே.மு.தி.க. நிலைபாட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அடுத்தவர்களின் நிலைப்பாட்டில் நாங்கள் நுழைய முடியாது.

அரசின் செயல்பாட்டில் நிறையும், குறையும் உள்ளது. தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. ஒருமுறை தோற்றோம் என்பதற்காக, அந்த தோல்வி நிரந்தரமில்லை. இந்தநிலை மாறும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், டாக்டர் அறிவுரையின்படி பிரசாரத்தில் கலந்து கொள்வது குறித்த முடிவு செய்யப்படும்.இவ்வாறு விஜயபிரபாகரன் கூறினார்.

Leave a Reply