- செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டசபை தேர்தலை கண்காணிக்க 122 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை…

சென்னை, ஏப்.28-
‘‘தமிழக சட்டசபை தேர்தலை கண்காணிக்க, பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 122 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நாளை முதல் தமிழகம் வரவுள்ளனர்’’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்முறையாக…
தமிழக சட்டசபை தேர்தலில்தான், முதல்முறையாக, பதுக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்றுவதற்கான பணியில் வருமான வரித்துறையை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, புகார் வந்த அடுத்த சில நிமிடங்களுக்குள், பணம் பதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு, தேர்தல் பறக்கும் படையினரும், போலீசாரும் சென்று, அங்கிருந்து பணம், பொருள் வெளியே கொண்டு செல்லாமல் கண்காணிப்பார்கள். அடுத்து, வருமான வரித் துறையினர் அங்கு வந்து சோதனை நடத்தும்போது, பறக்கும் படையினர் உடனிருப்பார்கள். இதற்காக எல்லா மாவட்டங்களில், 10 அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட வருமான வரித் துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஒரு சில இடங்களில் மட்டும் பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (நேற்று)காலை மதுரையில் பேருந்தில் ரூ.50 லட்சத்தை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசாரும், வருமான வரித் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ெரயில்களில் சோதனை
தேர்தல் விதிமீறல், பணம் பதுக்கல் குறித்து ‘1950’ என்ற எண்ணுக்கு யார் புகார் தெரிவித்தாலும்,அந்த புகார் உடனடியாக கம்ப்யூட்டர் வழியாக, தேர்தல் பறக்கும் படைக்கு சென்றுவிடும். தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட கலெக்டர் ஆகிய யார் அனுமதியும் இல்லாமல், பறக்கும் படையினர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதுமட்டுமன்றி, சென்னை உள்பட தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தனியாக வருமான வரி புலனாய்வு பிரிவு நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. துறைமுகத்திலும் சந்தேகத்துக்கிடமான வகையில் உள்ள பொருட்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவு ெரயில்கள், புறநகர் மின்சார ெரயில்களிலும் ெரயில்ேவ போலீசார் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் முழுவதும் தினமும் தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.

ரூ.61 கோடி
தேர்தல் செலவின பார்வையாளர்கள் தற்போது தமிழகம் முழவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 29-ந் தேதி (நாளை) முதல்கட்ட பணியை முடித்து விட்டு சென்றுவிடுவார்கள். மீண்டும் மே 3-ந் தேதி திரும்ப வந்து பணி மேற்கொள்வார்கள். பொது பார்வையாளர்களாக 122 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நாளை முதல் தமிழகம் வரவுள்ளனர். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மார்ச் 4-ந் தேதியிலிருந்து இதுவரை தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித் துறை மூலமாக மொத்தம் ரூ.61 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட வகையில், ரூ.26 கோடி உரியவர்களிடம் திரும்பத் தரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெயர் விவரமும், இறுதி வாக்காளர் பட்டியலும் 29-ந் தேதி மாலை அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை அப்போதுதான் தெரியவரும். கரூரில் போலீஸ் பெண் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை.

ராஜினாமா?
வாகனங்களில் கட்சியின் கொடியை வைக்க வட்டார போக்குவரத்து அலுவலரிடம், கட்டணம் செலுத்தி அனுமதி பெற வழிவகை உள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர்கள், பதவியை ராஜினாமா செய்யாமல், சட்டசபை ேதர்தலில் போட்டியிடலாம். அதுபோல், உள்ளாட்சி மன்றத்தில் பதவி வகிப்பவர்கள், பதவியை ராஜினாமா செய்யாமல், சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியுமா என்று அறிவிக்கப்படும். ஏற்கனவே, பல கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளனர். உள்ளாட்சி பதவியில் இருந்து கொண்டே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், உள்ளாட்சி பதவி தானாக பறிபோய்விடும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

பாக்ஸ்
தேர்தல் செலவு ரூ.200 கோடி
ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு ரூ.200 கோடி செலவிடப்படுகிறது. இதில், 70 சதவீத தொகை, அதாவது ரூ.140 கோடி, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தேர்தல் பணி படி வழங்குவதற்காக வழங்கப்படுகிறது. இதுதவிர, தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்ெகாள்ள மத்திய அரசு ரூ.1.50 கோடி வழங்கியுள்ளது’’ என்று தெரிவித்தார்.**

Leave a Reply