- செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வின் "மிஸ்டு கால்" பிரசாரம் கருணாநிதி தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்.17-

சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வின் "மிஸ்டு கால்" பிரசாரத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"மிஸ்டு கால்"
2016-ல் ஆட்சி மாற்றத்திற்கு தி.மு.க.வை  ஆதரிப்பவர்களுடன் தலைவர் கருணாநிதியை தொடர்பு கொள்ளும் "மிஸ்டு கால்" பிரசாரத்துக்கான, 72200 72200 தி.மு.க. தலைவர் கருணாநிதி என்ற எண்ணை தொடங்கிவைத்தார். இந்த எண்ணுக்கு "மிஸ்டு கால்" கொடுத்து, திறமையாகவும், நேர்மையாகவும் செயல்படும் அரசு நிர்வாகத்தை அளிக்க விரும்பும் தி.மு.க.வின் முயற்சியில் ஒவ்வொருவரும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நல்ல அரசு நிர்வாகம் நடக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களை மதுவின் மூலம் அ.தி.மு.க. அரசு அடிமையாக்குகிறது. அ.தி.மு.க. அரசின் சாதனை மதுக்கடைகளை தெருவுக்கு தெரு திறந்தது என்பதால், “மதுவிலக்கை அமல்படுத்த முடியாது” என்று அமைச்சர் சட்டமன்றத்திலேயே அறிவிக்கிறார். அதை பெண் முதல்-அமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவும் ஏற்கிறார்.
72200 72200
தமிழகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் 72200 72200 என்ற எண்ணுக்கு "மிஸ்டு கால்" கொடுத்து, நேர்மையான, திறமையான, செயல்படும் அரசு அமைக்கும் தி.மு.க. வின் உன்னத முயற்சிக்கு உறுதுணையாக இருக்கவே இந்த “மிஸ்டு கால் பிரசாரத்தை” கழகம் துவங்குகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து எவ்வித கட்டணமும் இன்றி 72200 72200 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளளாம். நீங்கள் தொடர்பு கொண்டவுடன் மணி ஒலிக்கும். ஒரு முறை ஒலித்தவுடன் தானாகவே இணைப்பை துண்டித்துக் கொள்ளும். உடனே தலைவர் கருணாநிதி உங்களை அழைப்பார்.
அப்போது மிஸ்டு கால் கொடுத்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் தலைவர் கருணாநிதி, "அ.தி.மு.க. அரசை அகற்றும் இந்த சீரிய முயற்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக் கொள்வார். அத்துடன் இந்த “மிஸ்டு கால்” பிரசாரம் நிறைவுக்கு வராது. அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது உங்களுக்கு தகவல் தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply