- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் தே.மு.தி.க.வில் இன்று நேர்காணல் தொடக்கம் விஜயகாந்த் நடத்துகிறார்

சென்னை, பிப்.22-
தே.மு.தி.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் விஜயகாந்த் இன்று (திங்கட்கிழமை) முதல் நேர்காணல் நடத்துகிறார்.

இது குறித்து தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேர்காணல்

தே.மு.தி.க. சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முன்னிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற இருக்கின்றது.

எனவே விருப்பமனு அளித்துள்ளவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனு அளித்துள்ளீர்களோ, அந்த மாவட்டத்திற்கான நேர்காணல் நடைபெறும்  தேதியில் வருகைதந்து நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வரும்பொழுது, கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு தேவையான ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply