- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் 5-வது நாளாக ஜெயலலிதா நேர்காணல்

சென்னை, மார்ச் 26-
சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த அ.தி.மு.க.வினரிடம் 5-வது நாளாக ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

நேர்காணல்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கென ஒவ்வொரு கட்சியிலும், அக்கட்சி சார்பாக போட்டியிட தொண்டர்கள் விருப்பமனு தாக்கல் செய்தனர். ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுமே விருப்பமனுத் தாக்கல் நடத்தி முடித்து விட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வேட்பாளர்களிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தி வருகிறார் . கடந்த 6, 21, 22 ஆகிய 3 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

அலைமோதும் கூட்டம்

25-ந் தேதி வேலூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. அதில் விடுப்பட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நேற்று காலையும் மாலையும் நடைபெற்றது. இந்நிலையில், 5-வது நாளாக நேற்று தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு  நேர்காணல் நடத்த வேட்பாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நேர்காணல் இன்றும் தொடர்ந்தும் நடக்கிறது.அ.தி.மு.க.வில் நேர்காணல் நடப்பதையொட்டி போயஸ் கார்டன் சாலைகள் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் அலைமோதுகிறது. தினந்தோறும் நேர்காணலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Leave a Reply