- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும் கருணாநிதியை சந்தித்தபின் காதர்மொய்தீன் பேட்டி

சென்னை, பிப்.16-தி.மு.க.கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்வதாக, தி.மு.க.தலைவர் கருணாநிதியை சந்தித்தபின், காதர்மொய்தீன் கூறினார்.
காங்கிரசைத் தொடர்ந்து…

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு சென்னையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சட்டசபை தேர்தலுக்கு கூட்டணியை உறுதி செய்தார்.
முஸ்லிம் லீக் கட்சி
இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி  தலைவர் காதர் மொய்தீன், தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் நேற்று சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.
தி.மு.க.கூட்டணியில் தொடரும்
கருணாநிதியை சந்தித்த பிறகு வெளியே வந்த காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:–-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும்.
இவ்வாறு காதர்மொய்தீன் கூறினார்.

Leave a Reply