- அரசியல் செய்திகள், செய்திகள், மாவட்டச்செய்திகள்

(சட்டசபை)விதவைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? அமைச்சர் பதில்…

சென்னை, ஜன.22-
சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர் குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு) பேசும்போது, ‘முதியோர் உதவித் தொகை நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என்று புகார் உள்ளது. விதவைகளுக்கு ஓய்வூதியம் தருவதில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய பேர் உத்தரவு வைத்துக் கொண்டு, உதவித் தொகையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.
இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பதிலளித்து பேசியதாவது:-
அரசு சார்பில், 9 பிரிவுகளில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நிலுவை இல்லாமல், அவர்களின் வங்கிக் கணக்கிலும், போஸ்டல் ஆர்டரிலும் ஓய்வூதியம் தரப்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெற உத்தரவு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முகாமில் ரசீது பெற்றது, உத்தரவு அல்ல.
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் தருவதற்காக ஆண்டுக்கு ரூ.4200 கோடி நிதியை இந்தியாவில் ஒதுக்கீடு செய்துள்ள ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான்.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் பதிலளித்தார்.

Leave a Reply