- செய்திகள்

சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு புறப்பட்டார்…

சென்னை, ஆக.17-
தி.மு.க. தலைவரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி நேற்று சட்டசபைக்கு வந்தார். வருகை பதிவேட்டில் பதிவேட்டில் கையெழுத்திட்டு புறப்பட்டார்.
கருணாநிதி வந்தார்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கைத்தறி, துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இந்த மானியக்கோரிக்கை விவாதத்தை தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தார். அவரை எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வரவேற்றனர். பின்னர் சட்டமன்ற லாபிக்கு வந்த அவர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.

Leave a Reply