- செய்திகள்

சசிகலா புஷ்பாவின் தயார் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு…

 

மதுரை, ஆக.18-

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்த 2 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா மற்றும் சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த 2 வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க கவுரி முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வருகிற 23-ந்தேதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply