- செய்திகள், மாவட்டச்செய்திகள்

சங்பரிவாருக்கு த.மு.மு.க. கண்டனம் மதரஸா மாணவர்களைத் தாக்கிய…

சென்னை, மார்ச் 31-
மதச் சாயம் பூசப்பட்ட கோஷத்தை எழுப்ப மறுத்த மதரஸா மாணவர்களைத் தாக்கிய சங்பரிவார் ெசயலுக்கு த.மு.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில், சங்பரிவாரின் மதச் சாயம் பூசப்பட்ட கோஷமான ‘பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை முழங்கவேண்டும் இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டி  மதரஸா மாணவர்கள் மீது சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளது. தவறான கற்பிதங்களை உருவாக்க தொடர்ந்து முயலும் சங்பரிவார் சக்திகளின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மதரஸா மாணவர்களைத் தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply