- செய்திகள், விளையாட்டு

சகஜ நிலைக்கு திரும்பிவிட்டேன்-பென் ஸ்டோக்ஸ்

 

லண்டன், ஏப்.22:-
தான் தற்போது சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதின. இதில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகளின் கார்லோஸ் பிராத்வெயிட், ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் 4 சிக்ஸர்களைத் தொடர்ந்து ஆடி தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன் காரணமாக ஸ்டோக்ஸ் அப்போது கண்ணீர் விட்டு அழுதார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றத்துக்கு உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply