- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு தியாகி ராமசாமி பெயரை சூட்டவேண்டும்

சென்னை, பிப்.4-
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தொழிலாளர்களின் அப்பழுக்கற்ற தலைவர் தியாகி  என்.ஜி. ராமசாமி பெயரை சூட்டவேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-
நரேந்திர மோடி
கோவை பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பற்றி பேசியிருக்கிறார். ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலா உள்ளிட்ட ஐந்து மாணவர்களை கல்லூரியில் இருந்து தூக்கி எறிவதற்கு காரணமான மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மீது நடவடிக்கை எடுக்காத நரேந்திர மோடி, அவரது பெயரை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது?.
போராட்டம்
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.580 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது நரேந்திர மோடி திறந்து வைத்துள்ள 500 படுக்கை வசதி கொண்ட கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தொழிலாளர்களின் அப்பழுக்கற்ற தலைவர் தியாகி என்.ஜி. ராமசாமி பெயரை வைக்க வேண்டும் என்று மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், அவர் பெயரை மத்திய பா.ஜ.க. அரசு வைக்க மறுத்துவிட்டது. இந்தபோக்கு தொழிலாளர் வர்க்கத்தினரிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த தியாகி என்.ஜி. ராமசாமி பெயரை வைக்க வேண்டும் என்ற தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

Leave a Reply