- செய்திகள், மாநிலச்செய்திகள்

கோவில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் இழப்பீடு

திருவனந்தபுரம், ஏப்.11-

கொல்லம் கோவில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் சால்பில் தலா ரூ.12 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இழப்பீடு

கேரள மாநிலம், கொல்லம் கோவிலில் ஏற்பட்ட பயங்கர வெடி-தீ விபத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். 300 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், கேரள மாநில அரசு சார்பில் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டியும் இழப்பீடு தொகை அறிவித்துள்ளனர்.

ரூ.12 லட்சம்

பலியானவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும் என மொத்தம் ரூ.12 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.

பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக பிரதமர் மோடி தலா ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை அறிவித்து இருக்கிறார்.

காயம் அடைந்தவர்களை திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல உதவும்படி, விமானப்படைக்கும் பிரதமர் உத்தரவிட்டு இருக்கிறார்.

Leave a Reply