- செய்திகள், விளையாட்டு

கோலியுடன் இணைந்து ஆடுவது சந்தோஷமானது-வாட்சன்

 

பெங்களூரு, ஏப்.12:-

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் இணைந்து ஆடுவது சந்தோஷமானது என்று என்று ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலியுடன் வாட்சனும் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாட்சன், தன்னுடன் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள பலரோடு இப்போது சேர்ந்து ஆடுவது மகிழ்ச்சியான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுவும் குறிப்பாக விராட் கோலியுடன் இணைந்து அவரது அணியில் ஆடுவது மிகவும் சந்தோஷமான விஷயம் என்றும் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், சர்வதேசப் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராகவும், 3-வது ஆட்டக்காரராகவும் களம் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதே சமயம் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக எந்த நிலையில் களம் இறங்கினாலும் அது தனக்கு மகிழ்சியான ஒன்று தான் என்று வாட்சன் குறிப்பிட்டார்.

Leave a Reply