- செய்திகள், விளையாட்டு

கோலியின் இன்னொருமுகம்

 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான முகத்தை மட்டுமே பார்த்து ரசித்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, தனக்கு இன்னொரு முகமும் உண்டு என்பதை தற்போது அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

விராட் கோலி தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர் உதவி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் புனேயில் உள்ள ஏபிஐஎல் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த அமித் போஸ்லே என்பவருடன் சேர்ந்து அபல்மயா என்ற முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்குள்ள முதியோர்களைச் சந்தித்து உரையாடினார். கோலியின் வருகையை சற்றும் எதிர்பாராத அமல்மயா அறக்கட்டளையின் நிறுவனர் அபர்ணா தேஷ்முக் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்.

அபல்மயா தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்த அறக்கட்டளைக்குத் தேவையான நிதியை உடனடியாக ஏபிஐஎல் அறக்கட்டளையுடன் இணைந்து வழங்குவதாகவும் கோலி குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய கோலி, அபர்ணா போன்றவர்கள்  முதியோர்களுக்காக சிறப்பாக சேவை ஆற்றி வருவதாக குறிப்பிட்டார். முதியவர்களை புறக்கணிப்பது தவறு என்றும் அவர்களைப் பேணி காக்க வேண்டியது கடமை என்றும் கோலி குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, பாரதிய ஜனதா எல்எம்ஏ ஒருவரால் தாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சக்திமான குதிரையின் ஆன்மா சாந்தி அடைய கோலி இரங்கல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, ஆட்டத்தில் மட்டும் அதிரடி காட்டாமல் மனிதபிமான செயல்களில் அதிரடியாக களம் இறங்கும் கோலியின் மறுமுகம் நிச்சயம் ரசிகர்களும் ஊன்று கோலாக அமையும் என்பது திண்ணம்.

Leave a Reply