- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

கோலியிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்-வில்லியம்சன்

 

புதுடெல்லி, மார்ச் 30:-

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலியிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் இன்று அரை இறுதிப் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் ரூட்டின் ஆட்டத்தைப் பின் பற்றுவீர்களா அல்லது இந்திய வீரர் விராட் கோலியின் ஆட்டத்தைப் பின்பற்றுவீர்களா என்று கேள்விக்கு வில்லியம்சன் இந்த பதிலை அளித்தார்.

கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் எடுத்தார். அதே போல் ரூட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் எடுத்தார்.

இது குறித்து பேசிய வில்லியம்சன், கோலி, ரூட் இரண்டுபேருமே அருமையாக விளையாடி வருகிறார்கள். இரண்டு பேரையும் நேசிக்கிறேன். நீண்ட காலமாக இருவரும் மிகவும் திறமையாக விளையாடி வருகிறார்கள்.  அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தன்னைப் பொருத்தவரை தன்னுடைய பணியை நன்றாக செய்வதற்காக மிகவும் முயற்சித்து வருவதாகவும் வில்லியம்சன் குறிப்பிட்டார்.

Leave a Reply