- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு…

மதுரை,டிச.18-
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆண்டாள்புரம் போலீசார் தி.மு.க பிரமுகரான அட்டாக் பாண்டி உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் நேற்று 117 சாட்சிகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடங்கிய 60 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று மதுரை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தனஞ்செயன் முன்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசார் தாக்கல் செய்தனர். விரைவில் குற்றவாளிகளுக்கு இந்த நகல்கள் வழங்கப்பட உள்ளது.

Leave a Reply