- செய்திகள், வணிகம்

கோதுமை பயிரிடும் பரப்பு சரிவு

 

இந்த ராபி பருவத்தில் (2015 அக்டோபர்-2016 ஏப்ரல்) கடந்த டிசம்பர் வரை 2.71 கோடி ஹெக்டேர் பரப்பில் கோதுமை சாகுபடி நடைபெற்றுள்ளது. இது சென்ற ராபி பருவத்தின் இதே காலத்தைக் காட்டிலும் 7 சதவீதம் குறைவாகும். அப்போது 2.93 கோடி ஹெக்டேர் பரப்பில் கோதுமை பயிரிடப்பட்டு இருந்தது. அதேபோல் பருப்பு சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது. 1.28 கோடி ஹெக்டேர் பரப்பில் பருப்பு பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த பருவத்தின் இதே காலத்தை காட்டிலும் 2.35 சதவீதம் குறைவாகும். அப்போது 1.31 கோடி ஹெக்டேர் பரப்பில் பருப்பு சாகுபடி நடைபெற்றது.

Leave a Reply