- செய்திகள், மகளிர்

கோதுமை கேரட் கேக்

ருசியோ ருசி
டாக்டர் செஃப் கே.தாமோதரன்

தேவை
கேரட் துருவல் -– 1 கப்
தேங்காய்த் துருவல் -– 1 கப்
கோதுமை மாவு –- 1 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
சர்க்கரை –- 1 கப்
நெய் -– 2 கப்
முந்திரிப் பருப்பு -– 10

செய்முறை
கடாயில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கிளறவும்.  சர்க்கரை கரைந்ததும் கேரட் துருவல், தேங்காய்த் துருவல் இரண்டையும் போட்டு 2 நிமிடங்கள் கிளறவும்.
பிறகு, கோதுமை மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.  இதில் காய்ச்சிய நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒட்டாத பதத்தில் வரும் போது ஏலக்காய்த்தூள் + வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறவும். பிறகு, சிறிது காய்ச்சிய நெய்யை தட்டில் முழுவதும் தடவி விட்டு, கிளறிய ஸ்வீட்டை தட்டில் ஊற்றவும்.  அறியவுடன் விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

Leave a Reply