- செய்திகள், வணிகம்

கோதுமை இறக்குமதி மீதான 25 சதவீத வரி நீட்டிப்பு

சர்வதேச அளவில் கோதுமை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் நம் நாடு உள்ளது. கடந்த அக்டோபரில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மீது வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இந்த நிலையில், உள்நாட்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது ஜூன் 30 வரை இதனை நீட்டித்துள்ளது. புதிய பருவத்தில் அறுவடை செய்யப்படும் ேகாதுமை இம்மாத இறுதி முதல் சந்தைக்கு வரத்தொடங்கும். இந்நிலையில் குறைந்த விலையில் கோதுமை  இறக்குமதியானால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனை கருத்தில் கொண்டே மத்திய தற்போது வரியை மேலும் 3 மாதத்துக்கு நீட்டிப்பு செய்துள்ளது.

Leave a Reply