- செய்திகள், விளையாட்டு

கொல்கத்தா மராத்தான் போட்டிமுதல், இரண்டாம் இடங்களில் முப்படை வீரர்கள்

கொல்கத்தா, மார்ச்

கொல்கத்தாவில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் முப்படையைச் சேர்ந்த முகம்மது யூனஸ், பகதூர் சிங் தோனி இருவரும் முறையே முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

கொல்கத்தாவில் நேற்று இந்திய தடகள சங்கத்தின் சார்பில் மராத்தன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முப்படையைச் சேர்ந்த முகமது யூனஸ் 2 மணி 30:37 நிமிடங்களில்  கடந்து, முதல் இடம் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக முப்படையைச் சேர்ந்த தோனி 2 மணி 30:47 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ரயில்வே வீரர் அரவிந்த் குமார் 2 மணி 32:13 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் ஜோதி சௌகான் முதலிடத்தையும் அனிதா சௌத்திரி இரண்டாம் இடத்தையும் பூஜா மண்டல் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

Leave a Reply