- செய்திகள்

கொலம்பியா அழகிக்கு 15 ஆண்டு சிறை உலக அழகிப் போட்டிக்கு சென்றபோது போதைப் பொருள் கடத்தல்…

பெய்ஜிங், ஜூலை.29-

உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள சீனா சென்ற, கொலம்பியா அழகி போதைப் பொருள் கடத்தியதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

22 வயது அழகி
கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஜூலியானா லோபஸ் சர்ரசொலா (வயது22). கொலம்பியாவில் நடைபெற்ற ‘மிஸ் ஆண்டிகுவா அழகி’ போட்டியில் தேர்வானார். இதையடுத்து அவர் சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி சீனா சென்றார்.
சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய, அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் கொண்டு வந்திருந்த மடிக்கணிணியில் 610 கிராம் கோகைன் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கபட்டது.
கைது- விசாரணை
இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு குவாங்டோங் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றத்தில் சர்ரசொலா போதை பொருள் கடத்தியதை ஒப்பு கொண்டார்.
இந்த கடத்தலை செர்ஜியோ என்பவரின் மிரட்டலினால் செய்ததாகவும் கூறினார். இதற்கூறிய போன் ஆடியோவையும் நீதிமன்றத்தில் அவர் தரப்பில் வக்கீல் தாக்கல் செய்தார். முன்னதாக குற்றத்தின் தீவிரம் கருதி, கொலம்பியா அழகிக்கு அதிகப்பட்ச தண்டணை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
15 ஆண்டு ஜெயில்
வழக்கை விசாரித்த நீதிபதி, அழகி சர்ரசொலாவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் தண்டனை காலம் முடிந்தவுடன் அவரை சொந்த நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் என்றும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
———-

Leave a Reply