- செய்திகள்

கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப கடும் முயற்சி

கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-கொரோனா பரவல் கொரோனா இந்தியாவிலும் தமிழகத்திலும் பரவி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. அதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்நோய் தொற்றுப் பரவல், தற்போது மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் படிப்படியாகக் குறைய தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது. தேவையான அளவு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும், நம்முடைய மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி குணமடைய செய்யும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள்.கடும் முயற்சிஅரசைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்கள் மன நிறைவு பெறுகிற வகையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 68 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், இந்நோய்ப் பரவல் தமிழகத்தில் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்நோய்ப் பரவல் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு அரசு எடுக்கும் கடும் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும்.மருத்துவக்கல்லூரி பணிகள் திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி வழியாக ஓமலூர் வரையுள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்செங்கோட்டிலிருந்து பள்ளிப்பாளையம் வழியாக ஈரோடு செல்கின்ற சாலையையும் புதிதாக அமைக்க இருக்கிறோம். நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை அறிவித்த அரசு, அதற்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply