- செய்திகள், விளையாட்டு

‘கையில் பைசா கூட இல்லாமல் அலைந்தேன்’ …

மும்பை, ஏப். 27:-

உலகில் கோடீஸ்வர விளையாட்டு வீரர்களில் ஒருவராக சச்சின் இன்று இருந்தாலும், ஒரு நேரத்தில் கையில் பைசா கூட இல்லாமல் மும்பையில் அலைந்தேன் என்று சச்சின் டெண்டுல்கள், தனது சிறுவயது நினைவுகள் குறித்து உருக்கமாகப் பேசினார்.

டி.பி.எஸ். வங்கியின் ‘டிஜிபேங்க்’ குறித்த அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், செல்போன் இல்லாத காலத்தில் தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். இதோ அவர் கூறியது:

எனக்கு 12-வயசு இருக்கும்.  15 வயதுக்கு கீழ்பட்ட மும்பை கிரிக்கெட் அணிக்கு ‘செலக்ட்’ ஆகி இருந்தேன். புனே அணியுடன் 3 போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப் புனேவுக்கு போகிறோம் எனக்  கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கமுடியல. வீட்டில் இருந்து கொஞ்சம் பணம் வாங்கிகிட்டு அங்கே போனேன்.

முதல்போட்டி, 4 ரன்ல ‘ரன் அவுட்டாகி’ வெளியேறிட்டேன். 12 வயசு மட்டுமே ஆகியிருந்ததால வேகமாக ஓடி ரன் எடுக்கமுடியல. இதை நினைச்சு ‘ரெஸ்ட் ரூம்ல’ போய் கண்ணீர் விட்டு அழுதேன். சரி அடுத்த 2 மேட்சு இருக்கு, அதுல ரன் அடிக்கலாம்னு நினைச்சேன். ஆனால், மழை பெய்து 2 மேட்சும் நடக்காம போயிருச்சு. அதுக்குபிறகு, சினிமா, சாப்பாடு என நான் வெச்சிருந்த கொஞ்சம் பணம் எல்லாம் செலவாகிருச்சு.

நான் ரொம்ப சின்னப்பையனா இருந்ததால, பணத்தை எப்படி பிரிச்சு, பிரிச்சு சிக்கனமா செலவு செய்யனும் எனக்கு தெரியல. மும்பை ரெயில்வே ஸ்டேஸன்ல வந்து நான் இறங்கும் போது எல்லா காசும் தீர்ந்துபோச்சு. என்னா பன்றதுன்னு தெரியல. கையில ரெண்டு ‘பேக்’ இருந்துச்சு. என் பாக்கெட்ல சல்லி காசு கூட இல்லாம மும்பையில அலைந்தேன். வீட்டுக்கு எப்படி போறதுன்னு தெரியல.

அதக்குப்பிறகு ரென்டு பேக்கையும் தூக்கிக்கிட்டு, தாதர் ஸ்டேசன்ல இருந்து, சத்திரபதி ரெயில்வே ஸ்டேசன் வரைக்கும் நடத்தே போய் வீட்டுக்கு போய் சேர்ந்தேன்.

நினைச்சு பாருங்க. அப்போது, என்னிடம் ஒரு செல்போன் இருந்திருந்தா, ஒரு எஸ்.எம்.எஸ்., மட்டும் அனுப்பிருந்தேன்னா, என் அம்மா, அப்பா என் செல்போனுக்கு பணம் அனுப்பி இருப்பாங்க. நானும் ஒரு டாக்சி எடுத்து வீட்டுக்கு வந்திருப்பேன்.  இன்று தொழில்நுட்பம் அதிக அளவு முன்னேறிவிட்டது .

அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட்டில் வரலாற்றில் 3-வது நடுவர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, அவர்களால் ஆட்டம் இழந்த முதல் வீரரும் நான் தான் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply