- செய்திகள், மருத்துவம்

கேள்வி நேரம்…

 

மெனோபாஸ் ஸ்டேஜில் நான் இருக்கிறேன். அடிக்கடி கோபம் வருகிறது?  என்னை நான் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுங்கள்?
செல்வி, அடையார்
டாக்டர் உமா, மகப்பேறு மருத்துவர்
45 வயதைக் கடக்கும் பெண்களுக்கு மெனோபாஸ் என்பது ஒரு இக்கட்டான காலக்கட்டம் தான். இந்த தருணத்தில் எடை கூடும்.  ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்.  வளர்ச்சிதை மாற்றம் குறையும்.
கோபம், துக்கம், வெறுப்பு என பல்வேறு உணர்வுகள் வந்து போகும்.  உணவிலும், உடற்பயிற்சியிலும் அதிக கவனம் செலுத்துவது ரொம்ப முக்கியம்.  சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகள் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.  உடல் எடை அதிகரிக்காமல் காக்கலாம்.  கேக்ஸ், இனிப்பு நிறைந்த பழங்கள், அரிசி உணவுகளில் உள்ள மாவுச்சத்து ரத்தத்துடன் கலந்து குளுகோசாக மாற்றி உடலுக்கு சக்தியைத் தரும். இந்நிலையில் போதிய உடற்பயிற்சி உடலுக்கு இல்லாதபோது, உடல் எடையை அதிகரிக்க செய்வதுடன் கொலஸ்ட்ரால், இதய நோய், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரித்துவிடும்.
அவகடோ, ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த உணவுகள், வைட்டமின் ஈ, ஒமேகா 3, நட்ஸ் வகைகள், மீன் இவற்றை சேர்த்துக் கொள்வது மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் கோளாறையும் சீராக்கும்.
எலும்புகளில் தேய்மானம் அடையும்.  கால்சியம் நிறைந்த பால், பச்சை காய்கறிகள், தேங்காய் பால், அல்மண்ட் போன்றவற்றை சாப்பிடலாம்.  இதனால் மலச்சிக்கல், கிட்னியில் கல் உருவாவது தடுக்கப்படும்.
உடலுக்கான பயிற்சியை தினமும் செய்யும்போது, உடலில் அதிகப்படியான கலோரியை எரிக்கப்படும்.  உடல் எடையை சீராகும்.  உணவு ஆலோசகரை சந்தித்து, அவரின் ஆலோசனைப்படி உங்கள் உடலுக்கான உணவுப் பட்டியலை வாங்கி, அதன்படி உணவை சாப்பிடுங்கள்.  மேலும், உணர்வுகளை கட்டுப்படுத்த யோகா, தியானம் பயில்வது நல்ல பலனைத் தரும்.  சந்தோஷமான மனநிலையில் மனதை வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply