- செய்திகள், மகளிர்

கேள்வி நேரம்

 

எனக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது.  மாடிப்படி ஏறும்போது, இறங்கும்போது  கிறுகிறுவென தலைசுற்றுகிறது.  எதனால் இதுபோன்று இருக்கிறது?
கலா, திருவான்மியூர்

டாக்டர் ரேஷ்மி சுதா, நரம்பியல் நிபுணர்
பொதுவாக மயக்கம் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. மயக்கம், கிறுகிறுப்பு மூளையின் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது.
வழக்கமான சூழலில் இருந்து வேறு இடத்திற்கு இழுத்து செல்வது போன்றோ, தரையில் சாய்வது போன்றோ ஒருவித பாதிப்பை  கிறுகிறுப்பு ஏற்படுத்தலாம்.
இந்த கிறுகிறுப்பு தீவிரமானால் மயக்கம் வரும். கேட்கும் திறன் குறையும். நம்மைச் சுற்றியுள்ள பொருட்களும், நாமும் சுற்றுவது போன்ற பிரமை ஏற்படும்.  பார்வை லேசாக மங்கலாகி, சிலசமயம் வாந்தி, மயக்கம் ஏர்பட்டு, தரையில் விழவும் வாய்ப்பு உண்டு.  இந்த கிருகிறுப்பு சில நிமிடம் அல்லது சில மணி நேரம், சிலருக்கு சில நாட்கள்கூட நீடிக்கலாம்.
நரம்பு மண்டலத்தில் இருந்து, உட்புறக் காதில் ஏற்படக்கூடிய பாதிப்பினாலேயே இந்த மயக்கம் ஏற்படுவதாக கருதப்படுகிறது.  உடலின் உணவு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, காதில் கேட்கும் திறனை பாதிப்படையச் செய்வதாலேயே இந்த நிலை உருவாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், கழுத்தில் அடிபடுதல், வலிப்பு காரணமாகவும் கிறுகிறுப்பு வர  வாய்ப்புண்டு.
மயக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவரை சந்தித்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை பெறுவது அவசியம்.

Leave a Reply