- செய்திகள், மகளிர்

கேள்வி நேரம்

 

உஷ்ணத்தால் முடி அதிகமாக உதிர்கிறது?  இதற்கு இயற்கையான முறையில் எப்படி பராமரிப்பது?
வந்தனா, விருகம்பாக்கம்
டாக்டர் கண்ணன், சித்த மருத்துவர்
வெயிலால் தலையில் அதிகமாக வியர்த்து, மயிர்கால்கள் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் முடி கொட்ட ஆரம்பிக்கும். சில நோயின்களின் அறிகுறியாகவும் இருக்கும்.
* வாரம் ஒருநாள், நல்லெண்ணெயை காய்ச்சி, தலையில் விட்டு நன்றாக மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவையுங்கள்.  சீகைக்காய், ஷாம்பு போட்டு தலை முடியை அலசுங்கள். உடலில் உஷ்ணம் குறைந்து முடி உதிர்வது நின்ருவிடும்.
* தேங்காய் பாலால் முடியை மசாஜ் செய்து ஊற விடுங்கள். பிறகு அலச, பிசிக்கு, அழுக்குப் போய் முடி பட்டு போல் மென்மையாக இருக்கும்.  உதிர்வதும் நிற்கும்.
* வாரம் இருமுறை கற்றாழை மற்றும் அருகம்புல்லை ஜூஸாக்கி தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளியுங்கள்.  முடி வறட்சி நீங்கி, முடி மிருதுவாகும்.
இதைத்தவிர, தினமும் தலைக்கு குளியுங்கள்.  தலைக்கு பேபி ஷாம்பு பயன்படுத்துங்கள். முடியை ஈரம் போக நன்றாகத் துவையுங்கள். பெரிய பற்கள் உள்ள சீப்பால் வாருங்கள். வெளியே செல்லும் போது தலையில் ஸ்கார்ப் போட்டுக் கொள்ளுங்கள்.
பால், காய்கறிகள், கீரைகள், நட்ஸ், முட்டை, பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுங்கள்.  முடி ஆரோக்கியத்துக்கு தேவையான புரதம், கால்சியம் சத்து கிடைத்து முடி வளர்ச்சியை தூண்டும்.  முடி உதிர்வது நிற்கும்.  மேலும், அதிகம் தண்ணீர் அருந்துங்கள்.  இதனால், உடலில் உள்ள செல்கள் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு, மயிர்கால்களை வறட்சியடையாமல் பாதுகாக்கும்.  முடி உதிர்வது குறையும்.

Leave a Reply