- செய்திகள், மாநிலச்செய்திகள்

கேரள கோவில் தீ விபத்தில் பலி 109 ஆக உயர்வு

கொல்லம், ஏப்.12-

கேரள மாநில கோவில் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்தது. விபத்து தொடர்பாக கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பலி 109 ஆனது

கேரள மாநிலம், கொல்லம் பரவூர் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவின்போது நடந்த வாண வேடிக்கை, பயங்கர தீ விபத்தில் முடிந்தது. இதில் 106 பேர் பலியானார்கள். 400 பேர் காயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காயம் அடைந்தவர்களில் மேலும் 3 பேர் இறந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்தது. இந்த கோர விபத்து குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொலை முயற்சி வழக்கு

குற்றப்பிரிவு போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள், பட்டாசு ஒப்பந்ததார்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொலை முயற்சி, மரணம் விளைவித்தல் மற்றும் வெடிபொருட்கள் சட்டப்பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் 5 பேர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோடி-ராகுல்

வழக்குப்பதிவு செய்யப்பட்ட மற்றும் கைதானவர்களின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த தீ- வெடி விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கொல்லம் விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

Leave a Reply