- செய்திகள்

கொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…

திருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தடம் புரண்டன

தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூர் நோக்கி புறப்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா மற்றும் காருகுட்டி நிலையங்களுக்கு நடுவே வந்துகொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த ரெயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கவாட்டில் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ரெயில் சேவை ரத்து

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் மாற்று ரெயில்கள் மற்றும் பஸ்களின் மூலம் அருகாமையில் உள்ள எர்ணாகுளம் மற்றும் திரிச்சூர் நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர். பெட்டிகள் தடம் புரண்டதால் சேதம் அடைந்த தண்டவாளங்களை சீரமைக்க சுமார் 10 மணிநேரம் ஆகலாம் என்பதால் எர்ணாகுளம் – திரிச்சூர் வழிதடத்தில் செல்லும் அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பி விடப்பட்டது

திருவனந்தபுரம் – மும்பை, கன்னியாகுமரி – பெங்களூர், ஆலப்புழா – தன்பாத், திருவனந்தபுரம் – கோரக்பூர் ரப்திசாகர், திருவனந்தபுரம் – ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய தொலைதூர ரெயில்கள் திருநெல்வேலி – ஈரோடு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன.

Leave a Reply