- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

கூலிப்படை ரவுடி ஆயுதங்களுடன் கைது சென்னை கொடுங்கையூரில்

சென்னை,பிப்.17-

சென்னை கொடுங்கையூரில் பிரபல கூலிப்படை ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து ஆயுதங்களுடன் கைது செய்தனர்.
10 வழக்குகள்
சென்னை பெருநகர கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு  வருகிறார்கள். நேற்று ரவுடிகள் கண்காணிப்பு பிரிவுக்கு  கொடுங்கையூர் பகுதியில் ரவுடி ஒருவன் ஆயுதங்களுடன் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பட்டாக்கத்திகள்
அப்போது, அங்கு பதுங்கி இருந்த கொடுங்கையூர் காந்திநகரை சேர்ந்த இளையராஜா(வயது 28) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து பட்டாக் கத்திகள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், பரபல கூலிப்படை ரவுடியான இளையராஜா மீது இரண்டு கொலைமுயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 10 குற்ற வழக்குகள் ராயபேட்டை, குமரன் நகர் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், பிரபல ரவுடி சி.டி மணியின் கூட்டாளி என்பதும் தெரிய வந்தது.

Leave a Reply