- செய்திகள்

கூட்டுறவு வங்கியில் ரூ. 1 கோடி மோசடி திருத்தணி அருகே செயலாளர் கைது…

திருத்தணி, ஆக.9-
திருத்தணி கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த வங்கி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு வங்கியில் மோசடி
திருத்தணியை அடுத்த சிவாடா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன், நகை கடனில் மோசடி நடந்து இருப்பதாக மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளருக்கு புகார்கள் சென்றன.
ரூ. 1 கோடி மோசடி
அதையடுத்து திருத்தணி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ரூ.1 கோடி வரை மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
வங்கி செயலாளர் கைது
இந்நிலையில் கூட்டுறவு வங்கி செயலாளர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர். மோசடியில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply