- செய்திகள், மாவட்டச்செய்திகள்

கூட்டணி ஆட்சிதான் ஊழலை ஓழிக்கும் கள்ளக்குறிச்சியில் திருமாவளவன் பேச்சு…

 

கள்ளக்குறிச்சி, மே 15:-

கூட்டணி ஆட்சிதான் ஊழலை ஒழிக்கும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் ெதால். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
48 ஆண்டுகள் ஆட்சி
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் ராமமூர்த்தியை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் மாற்றம் நிகழப் போகிறது என்பதை கள்ளக்குறிச்சியில் கூடியிருக்கும் கூட்டம் அறிவிக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க கடந்த 48 ஆண்டுகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து ஊழல் செய்து தமிழகத்தை முன்னேறவிடாமல் செய்து விட்டன.
ஊழல் ஆட்சி
இந்த ஊழல் கட்சிகளை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். அண்ணா ஆட்சி செய்தார், கலைஞர் ஐந்து முறை, எம்.ஜி.ஆர். மூன்று முறை, ஜெயலலிதா மூன்று முறை என தி.மு.க 6 முறையும், அ.தி.மு.க 6 முறையும் ஆட்சி செய்தும் தமிழகத்தில் நல்லது நடக்கவில்லை. ஊழல் கலாச்சாரம், மதுக் கலாச்சாரம் பெருகிவிட்டது. பிரபாகரன் வீட்டுக்கு ஒரு மாவீரனை வளர்க்கச் சொன்னார். ஆனால் வீட்டுக்கு ஒரு குடிகாரனை வளர்க்கும் சூழ்நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இந்த அவலம் யாரால் ஏற்பட்டது.
ஜனநாயகம்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் காவல்துறையினர், ஆசிரியர், மாணவர் அனைவரும் குடிக்கின்றனர். ஜெயலலிதா கவலைப்பட்டது உண்டா? குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்திய சசிபெருமாள் மரணத்திற்கு ஆறுதல் இரங்கல் எதுவும் இல்லை.  தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாம் எடுத்த முயற்சி வெற்றி பெற வேண்டும். கூட்டணி வந்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும். ஜனநாயகம் தழைக்கும். இல்லையெனில் ஊழல் இன்னும் மோசமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

படவிளக்கம்:-

கள்ளக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசிய போது எடுத்தபடம்.

Leave a Reply