- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

கூடுதல் கட்டணமின்றி பள்ளி மாணவர்களுக்கு இ-சேவை மயைங்களில் பாடபுத்தகங்களை பெறலாம்

சென்னை, மார்ச் 1-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், மாணவர்களுக்கு தேவையான 1 முதல் 12 வது வகுப்பு வரையிலான பாட புத்தகங்களை இணைய வழி  (www.textbookcorp.in) ) மூலமாக (ஆன்லைன் சேல்) விற்பனை செய்து வருகின்றது.  இணைய வழி மூலமாக பணம் செலுத்த இயலாததால் பாடநூல்களை பெற முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், வட்ட அளவிலான அரசு பொது  இ-சேவை மையம் மூலமாகவும் பாடநூல்களை பணம் செலுத்தி பெற்றிட தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவற்றை அரசு பொது இ-சேவை மையத்திலேயே கணினியில் பாடநூல் நிறுவன இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் அருகிலுள்ள அரசு பொது  இ-சேவை மையத்தை அணுகி தேவையான பாடநூல்களை தேர்வு செய்து அதற்குரிய பணம் செலுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply