- செய்திகள், மாவட்டச்செய்திகள்

குழந்தை பாலியல் கொடுமை வழக்கு மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை, பிப். 20-
குழந்தை பாலியல் கொடுமை வழக்கு தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தை பாலியல்
சென்னையை சேர்ந்த வக்கீல் ரங்கநாயகி, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். குழந்தைகளுக்கான பாலியல் வழக்கை தடுக்க பள்ளிகளில்  உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.  இதுதவிர குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளை புகார் செய்ய இலவச தொலைபேசி எண்ணை மத்திய அரசு பிரபலபடுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ். கே. கவுல் மற்றும் நீதிபதி எம்.எம். சுந்தரேஸ்ஆகியோர் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
அறிக்கை
மனுதாரர் பாலியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டு வர மத்திய,மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது சிரமம் இருந்தால் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். குழந்தை பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுந்தவரை உடனடியாக நியமிக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
மேலும், வழக்கு விசாரணை வருகின்ற ஏப்ரல் மாதம் 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

Leave a Reply