- செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய பயணசீட்டு மையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும் பயணிகள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, மார்ச் 1-

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் உள்ள கணினி முன் பதிவு மையம், பயண சீட்டு மையத்தில் போதிய அடிப்படை வசதிகளை விரைவில் அமைக்க வேண்டும் என ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம்

கும்மிடிப்பூண்டி ெரயில் நிலையம், நகரில் உள்ள 30 ஆயிரம் பேர் மட்டுமல்லாமல், சுற்று புறத்தில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 81 கிராம மக்கள் வந்து போகும் இடமாகும். மேலும், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்யும் சுமார் 5 ஆயிரம் வட மாநில தொழிலாளர்களும் இந்த ரெயில் நிலையம் வழியாக வந்து செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த ெரயில் நிலையத்திலேயே செயல்பட்டு வந்த பயண சீட்டு மையம். தற்போது கணினி முன் பதிவு மையத்துடன் ெரயில் நிலையத்தை விட்டு வெளியே செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக உள்ள இந்த மையத்தில் முன்பதிவு செய்வதற்கென ஒரு பிரிவும், சாதாரண பயண சீட்டுக்கென ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது.

அடிப்படை வசதிகள்

முன்பதிவு மையத்தில் தொடுதிரை வசதி சரிவர வேலை செய்யாமல் இருப்பது ஒரு புறம் இருக்க, முன்பதிவு செய்ய வரும் பயணிகள் உட்கார போதிய இட வசதியும் இல்லை. அதேபோல், பயண சீட்டுகளை ஒரே கவுன்டரில் பெறுவதால், ெரயில் செல்லும் நேரத்தில் பயண சீட்டு பெற இயலாமல் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய ெரயில்களை தவறவிடுவது வாடிக்கையாக உள்ளது.

மேலும், நீண்ட நேரம் முன்பதிவு டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்பவர்களுக்கு தாகத்துக்கு குடிக்க கூட இங்கு குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, கும்மிடிப்பூண்டி ெரயில் நிலையத்தில் விரைவில் கூடுதல் கவுண்டர்களை திறந்து, முன்பதிவு மையத்தில் தேவையான நவீன வசதிகளை ஏற்படுத்தி, குடிநீர் வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply