- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து அயோத்திக்கு புனிதநீர் கலசம்

கும்பகோணம், ஜன.4-

கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து அயோத்திக்கு புனிதநீர் கலசத்தை இந்து அமைப்பினர் கொண்டு சென்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு…

உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் அமைந்திட வேண்டும் என்ற பிரார்த்தனையை  முன்வைத்து வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) அனுமன் ஜெயந்தி அன்று, அயோத்தியில் உள்ள அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு முக்கிய  நதிகளில் இருந்து அயோத்திக்கு புனிதநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

அதற்காக கடந்த 27-ந்  தேதி முதல் தமிழகத்தில் ராமேஸ்வரம், மதுரை,  கன்னியாகுமரி, திருச்சி, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில்  இருந்து புனிதநீர் கலசங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது

மகாமக குள புனிதநீர்

அதன்படி நேற்று  கோவில் நகரமான கும்பகோணம் மகாமக குளத்தில் விசேஷ பூஜைகள் செய்து  புனிதநீர் கலசத்தில் சேகரிக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சி  மாநில இளைஞர் அணி செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி தலைமையில் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில், இந்து அதிரடிப்படை மாநில பொதுச் செயலாளர் ராஜகுரு, அகில  பாரத இந்து மகா சபை மாநில தலைவர் சுபாஷ் சுவாமிநாதன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

இந்த புனிதநீர் கலசங்கள் அனைத்தும் தமிழகத்தில்  இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அயோத்தி செல்லும் குழுவினர்  மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்புனித நீரை கொண்டு 9-ந் தேதி அனுமன்  ஜெயந்தி அன்று அயோத்தியில் உள்ள அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

Leave a Reply