- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

குமரிஅனந்தன் நடைபயண கோரிக்கை வெற்றிபெறட்டும் பாரிவேந்தர் வாழ்த்து–

சென்னை, பிப்.14-
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மூத்த  அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றியவருமான ’இலக்கியச்செல்வர்’ குமரி அனந்தன், தமிழகத்தில் “மதுவில்லா சமூகம்” உருவாகிட பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையிலிருந்து குமரி வரை மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டார். தன்னுடைய 83 வது வயதிலும் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக ஏறக்குறைய 800 கி.மீ.தொலைவுக்கு, மக்கள் நலனுக்காக மதுவை ஒழிக்க போராடிவரும் குமரி அனந்தனின் சேவை போற்றத்தகுந்த ஒன்றாகும். அவரின் கோரிக்கையினை ஏற்று, தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பாரிவேந்தர் கூறி உள்ளார்.

Leave a Reply