- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

குப்பைத் தொட்டியில் ஏராளமான பணக்கட்டு வங்கிப் பட்டைகள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதா…

திருச்சி, மார்ச் 29-–
திருச்சி பொன்மலை பகுதியில் நூற்றுக்கணக்கான ரெயில்வே தொழிலாளர்கள் குடியிருப்பு நிறைந்துள்ளது. இந்நிலையில் ஜி கார்னரில் இருந்த பொன்மலை  மகளிர் காவல் நிலையம் செல்லும் சாலையோரத்தில் நேற்று காலை பணக்கட்டிற்கான வங்கி பட்டைகள் ஏராளமாகக் கொட்டப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், கொட்டப்பட்டு கிடந்த வங்கிப் பட்டைகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது கோடிக்கணக்கான ரூபாய் பணக்கட்டு பிரிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

கொட்டிக் கிடந்த பட்டைகளில் பல்வேறு வங்கிகளின்  பெயர்கள் அச்சிடப்பட்டு இருந்தன. இங்கு பிரிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான பணம் பொன்மலை வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர்.
இந்த வங்கி பட்டைகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே பொன்மலை காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம், திருச்சி ரெயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் பிரிக்கப்பட்டு  வங்கி பட்டைகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply