- செய்திகள்

குதிரை வண்டியில் வந்து வேட்புமனுத் தாக்கல்! கவனத்தை ஈர்த்த சுயேச்சை வேட்பாளர்…

நாகப்பட்டினம், ஏப்.28-
நாகை சட்டமன்றத் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் குதிரை வண்டியில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நாகை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆகியோரும் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுயேச்சை வேட்பாளர் குலோத்துங்கன் பழங்கால பாணியில் தற்போதைய நாகரிக வளர்ச்சிக்கு மாற்றாக குதிரை வண்டியில்  வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Leave a Reply