- செய்திகள்

குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது திருவள்ளூரில்…

திருவள்ளூர், ஜூலை. 29-
திருவள்ளூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூல் செய்து வந்த ரவுடியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
ரவுடி
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் வசிப்பவர் நடராஜ் என்கிற குரு (37). இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு பொதுமக்கள் மத்தியில் ரவுடியாக சற்றி வந்தார். கடந்த மாதம் மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீசாய் ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் சேகர் என்பவரை தனது கூட்டாளி ஹபீப் முகமது என்பவருடன் சேர்ந்து கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்தினார்.
கத்தியை காட்டி மிரட்டல்
மேலும் அங்கு உள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.வேடிக்கை பார்த்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து சிதறி ஓடினர். அதன் காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
குண்டாசில் கைது
அதையடுத்து, மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் நடராஜை கைது செய்தார். மேலும் நடராஜை குண்டர் தடுப்புக் காவலில் வைப்பதற்கு திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் சாம்சன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், நடராஜ் என்கிற குருவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நடராஜ் என்கிற குரு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply