- செய்திகள்

குடும்பத்தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு திருவள்ளூர் அருகே…

திருவள்ளூர், ஆக. 19-
திருவள்ளூர் அருகே குடும்பத் தகராறில் மனம் வெறுப்படைந்த வாலிபர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறு
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் வசித்தவர் சரவணன் (32). இவரது மனைவி யாமினி (30). இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி இருவரும் ஒரே இடத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
தூக்கு போட்டு சாவு
இதனால், வீட்டில் தனியாக இருந்த சரவணன் மனம் வெறுப்படைந்து, மனைவியின் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த மனைவி யாமினி வீட்டிற்கு வந்த பொழுது தூக்கில் பிணமாகத் தொங்கும் கணவரைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
விசாரணை
இதுபற்றி செவ்வாப் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தைக் கைப்பற்றி மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply