- செய்திகள், மாவட்டச்செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 130 பேர் கைது…

 

சென்னை, ஏப்.18-

சென்னை மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போலிஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ெசன்னை பெருநகர போலிஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் பழைய குற்றவாளிகளை கைது செய்யவும், நீதிமன்ற பிடியாணைக்கு ஆஜராகாத குற்றவாளிகளை கைது செய்யவும், வாகனத் தணிக்கைகள் செய்யவும் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் அடங்கிய குழுக்கள் நிறுவப்பட்டது. நேற்று முன்தினம்(சனி கிழமை) சென்னை நகரில் போலிசார் நடத்திய சோதனையில் சந்தேகத்தின் பேரில் 700 நபர்களும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 130 நபர்களும், கிரிமினல் குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு கமிஷனர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply