- செய்திகள்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்…

 

கலசபாக்கம், ஆக. 19-
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகே உள்ள நர்த்தாம்பூண்டி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த 15 நாட்களாக தில்லைநகர், காமராஜர் நகர், அண்ணாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படவிலலை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் நேற்று காலை  நார்த்தாம்பூண்டி – காஞ்சி சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
————-

Leave a Reply