- செய்திகள், தேசியச்செய்திகள்

குஜராத் மாநிலத்தில் 109.4 டிகிரி வெயில் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதி

ஆமதாபாத், மே13-

குஜராத் மாநிலத்தில் 109.4 டிகிரி வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். அனல் காற்று வீசுவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளனது.

109.4 டிகிரி வெயில்

குஜராத், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட். பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் அனல்காற்றுடன் வெயில் சுட்ெடரித்து வருகிறது. பல மாநிலங்களில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.

குஜராத் மாநிலத்தின் வடக்குப்பகுதி கட்ச், மற்றும் ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் கடும் வெயில் கொளுத்துகிறது. 43 டிகிரி செல்சியஸ் (109.3டிகிரி) முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை அங்கு வெயில் மக்களை பாடாய் படுத்துகிறது. மேலும் அங்கு அனல் காற்்றும் வீசுவதால் பகல்வேளயைில் மக்கள் வீதியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் அவல நிலை காணப்படுகிறது.
வடக்கு குஜராத், கட்ச். ராஜ்கோட், ஆமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்களில் மேலும் ஒருவாரம் இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி மனோரமா மொகந்தி தெரிவித்துள்ளார்.
அறிவுரைகள்
இதனிடையே ஆமதாபாத் நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் ெவயிலிலிருந்து தங்களை பாதுகாக்க வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இரு்க்குமாறும் இன்னும் சில தினங்கள் இந்த வெயில் 45 டிகிரி செல்சியஸ் வரை (115 டிகிரி வரை) உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply