- செய்திகள், விளையாட்டு

குஜராத் சிங்கத்திடம் ‘பணிந்தது தோனி அணி’ ெமக்கலம், ஆரோன் பிஞ்ச் வானவேடிக்கை

ராஜ்கோட், ஏப். 15:-
ஐ.பி.எல்.  கிரிக்கெட் போட்டியில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த தோனி தலைமையிலான ரைசிங் புனே ஜெயின்ட்ஸ் அணிக்கு  எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான  குஜராத் லயன்ஸ்  அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணியின் மெக்கலம், ஆரோன்  பிஞ்ச் ஆகியோரின் விளாசல் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

ராஜ்கோட் சவுராஸ்டிரா மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற புனே அணியின் தலைவர் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் ரகானே 21 ரன்னில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு பீட்டர்சன், டூப்பிளசி கூட்டணி 86 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பீட்டர்சன் 37 ரன்னிலும், டூப்பிளசி 69ரன்னில்(43 பந்து, 5 பவுண்டரி,4 சிக்சர்)பெவிலியன் திரும்பினார். தோனி 21 ரன்களுடனும், பாட்டியா ரன்ஏதும் சேர்க்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் லயன்ஸ் தரப்பில் ஜடேஜா, தாம்பே தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 18 ஒவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்ச், மெக்கலம் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். புனே அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த பிஞ்ச், மெக்கலம் சிக்சர், பவுண்டரிகளை விரட்டி மைதானத்தில் ரசிகர்களுக்கு வானவேடிக்கை நிகழ்த்தினர்.

ஆரோன் பிஞ்ச் 33 பந்துகளில் 50 ரன் சேர்த்து(2 சிக்சர், 7பவுண்டரி)அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா, மெக்கலத்துடன் சேர்ந்தார். அதிரடியாக பேட் செய்த மெக்கலம் 49 ரன்னில்(31பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். ரெய்னா 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  பிராவோ 24(10பந்து, 3பவுண்டரி, ஒரு சிக்சர்)ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply