- செய்திகள், மாநிலச்செய்திகள்

குஜராத் அரசு மக்களை ஏமாற்றி வருகிறது ஆம் ஆத்மி அரசு நாட்டுக்கே மாதிரி அரசாங்கமாக திகழ்கிறது

புதுடெல்லி, ஏப்.28-

"மக்களை ஏமாற்றி வரும் குஜராத் மாநில அரசைப் போல் அல்லாமல் ஆம்ஆத்மி அரசு,  நாட்டுக்கே மாதிரி அரசாங்கமாக திகழ்கிறது" என்று ெடல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

கெஜ்ரிவால் பேச்சு

டெல்லியில் நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சியின் ேதசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

ஆம் ஆத்மி அரசை நாட்டு மக்கள் ஒரு மாதிரி அரசாங்கமாக தேர்வு செய்துள்ளனர். அதே நேரத்தில் குஜராத் மாநில அரசு  மாடல் அரசு என்று கூறிக்ெகாண்டு நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.

நமது கட்சி விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தேர்தல்களில் குறைந்தது 90 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து அரசு அமைக்க தீர்மானித்துள்ளது.

கடுமையாக உழைக்க வேண்டும்

தேர்தல்களில் நாம் போட்டியிடலாம். ஆனால் அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். குறைந்தது 100க்கு 90 சதவீத இடங்களிலாவது ெவற்றி பெற வேண்டும்.  தேர்தல்களில் நாம் போட்டியிட்டு மாற்றம் ஏற்படுத்தும் வகையில் அரசு அமைக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சியினர் ஓட்டு வாங்குவதற்காக வளர்ச்சி என்ற ெபயரில் பிரசாரம் செய்கின்றனர்.  அதன்பிறகு பாரதமாதா வாழ்க  என்பது போன்ற கோஷத்தை எழுப்பி மக்களின் கவனத்தை திசை திருப்பி விடுகின்றனர். இந்த கோஷத்தை எழுப்பவில்லை என்றால் உங்களை அடித்து உதைப்பார்கள்.

அன்னா ஹசாரே இயக்கத்தில் மக்கள் பாரத் மாதா வாழ்க என தங்கள் இதயத்திலிருந்து முழங்கினர். ஆனால் பா.ஜனதாவினர் இதற்காக மிரட்டி வருகிறார்கள். இதனால் மாணவர்கள். விவசாயிகள், நகைவியாபாரிகள் என ஒவ்வொருவரும் கோபத்தில் உள்ளனர். நாட்டின் தலைமை நீதிபதி கூட அழுகிறார் அந்த அளவு நாட்டின் நிலை உள்ளது.

ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத்தை பார்த்து மக்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

இவ்வாறு முதல்-அமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் பேசினார்.

Leave a Reply