- சினிமா, செய்திகள்

கீர்த்தியின் கீர்த்தி

 

நடிகை கீர்த்திவாசன் பெரிய ஹீரோக்களின் ஜோடியான பிறகு விளம்பரங்களில் அவரது படத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இதற்கு முன் நடந்த கதை வேறு. `இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானவரை அந்தப் படம் ஒடாததால் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ரஜினிமுருகன் படம் வந்த பிறகே ராசியான நடிகை ஆனார். அதன்பிறகு அவருக்கு கிடைத்த முக்கியத்துவமே வேறு. இதற்கெல்லாம் முன்பே `பாம்பு சட்டை' படத்தில் பாபிசிம்ஹாவுடன் ஜோடி சேர்ந்தார். படத்தின் பூஜை தொடங்கி அடுத்தடுத்து எந்த விளம்பரத்திலும் கீர்த்தி சுரேஷூக்கு முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. இப்போது `பாம்பு சட்டை' ரிலீசாகவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் தான் விளம்பரங்களில் அதிகம் தெரிகிறார். ரஜினிமுருகன் அந்த அளவுக்கு கீர்த்தியை உச்சத்தில் கொண்டு நிறுத்தி விட்டார். இதுதான் சினிமா என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

Leave a Reply